Saturday, May 18, 2013

புதுவையில் சித்தர்கள் பகுதி -1


                          சித்தர்கள் யார் ?

சித்தர்கள் ஏன் புதுவைக்கு வருகிறார்கள் ?




சித்து அல்லது சித்தி என்றால் ஆற்றல், வெற்றி, கைகூடல்
என்று ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்கள் உண்டு. ஒருவர் 
அசாதாரண செயலைச் செய்தால் அவர்
சித்து விளையாட்டு செய்கிறார் என்பது பொருள்.
எனவே சித்தர்கள் என்றால் பேராற்றல் படைத்தவர்கள் என்று பொருள். பொதுவாக அட்டமா சித்;திகள் (எண்வகை ஆற்றல்) கைவந்தவர்களே சித்தர்கள் எனப்படுகிறார்கள்.
சித்தர் அடியார்க்கு நல்லார், சித்தன் என்னும் சொல்லுக்குப்
பொருளாகச் செய்ய வேண்டுவனவற்றைச் செய்து முடித்தவன், கன்மங்களைக் கழுவினவன் எண்வகைச்
சித்திகளையும் உண்டாக்கின்றவன் என்பர்.
சித்தர்கள் சமயக் கோட்பாடுகளைப் புறந்தள்ளிவிட்டு, தங்களுக்கென்றொரு
கொள்கையை வகுத்துக் கொண்டு அதன் வழி ஒழுகினர். மத மாச்சரியங்கள்,
சாதி பேதங்கள்,உயர்வு தாழ்வு இவை அனைத்தையும் கடந்து நின்றார்கள்.
சித்தர்களைப் பற்றிய பல்வேறு கதைகளும் கருத்துகளும் நாட்டில் நிலவி வருகின்றன.
சித்தர்கள் பற்றிய செய்திகள் எல்லாம் செவி வழியாகவும் நூல்
வழியாகவும் மட்டுமே கிடைக்கக் கூடியவையாக இருக்கின்றன.

சித்தர்கள், உலகத்தின் பொருள் வாழ்க்கை நெறிக்கு உடன் படாதவர்களாகத்
தங்களுக்கென்று தனி வழியை வகுத்துக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர்.
சித்தர் செயல்களைத் தோற்றுவித்தவராகச் சிவனையும், தமிழகத்தில் சித்தர் மரபை உருவாக்கியவராகத் திருமூலரையும் குறிப்பிடலாம்.
சித்தர்கள் பல்வேறு தோற்றங்களில் இருந்துள்ளனர் எனத் தெரிகிறது. தாடியுடன் கூடிய சடைமுடியுடனும், நிர்வாண கோலத்திலும், லங்கோட்டோடும், வெளுத்த செம்மறியாட்டுத்
தோலாலான வெள்ளைப் போர்வையுடனும், புலித்தோலாலான
ஆசனத்தில் அமர்ந்த நிலையிலும் காட்சியளித்துள்ளனர்.
சித்தர்கள் மேற்கொண்ட ஒழுக்க முறையில், ‘பொய்ம்மை மொழியாது, வாய்மை வழி நடத்தல்,சூது, வாது, கபடு, தந்திரம் இவைகளை அகற்றிவிட்டு நன்மைகளைச் செய்வதுசித்தர்கள் கூறும் இறைவன் வெளியில் இல்லை; உடம்பின் உள்ளே இருக்கிறது.
பிறப்பும் இறப்பும் தரும் இறைவன் வாழும் இடம் நம் தலையின் உச்சியாகும்
பாசம் என்னும் இருளையும் விலக்கிவிட்டு, ஆணவத்தையும், யான் எனது என்னும் செருக்குகளையும் கழியவிட்டு விட்டு, இதமான வழிமுறைகளைக் கண்டறிந்து அவ்வழியைப் பின்பற்றத் தொடங்கியவர்கள் சித்தர்கள்.
சித்தர்கள், இந்த உலகத்திலுள்ள பொருளியல்சார் வாழ்க்கை நெறிகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள். தாங்கள் எண்ணிய ஒரு இலக்கை நோக்கிச் சென்று அதன் பயனை அறிந்து ஆனந்தம் கொள்பவர்கள்.சித்தர்கள் சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்து மூடநம்பிக்கைகளுக்கு இடந்தராதவர்கள். சடங்குகளையும், சடங்குகளோடு தொடர்புடைய வழிபாடுகளையும் ஏற்காதவர்கள்.

'நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணெமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ?"

சிவவாக்கியர் பாடிய இந்தப் பாடல் நாடறிந்த பாடல்.

 தங்கள் வாழ்க்கையில் கண்டறிந்த உண்மைகளைத் தெளிவாக எடுத்துரைப்பதுவே இவர்களின் நோக்கம். இவர்கள் 
தத்துவ ஞானிகள்; மெய்ஞ்ஞானிகள்; யோகிகள்;
மருத்துவர்கள் எனும் சிறப்புப் பெற்றவர்களாக இருந்துள்ளனர்.
சாதி, மதம், சமயம், சடங்கு முதலியனவற்றைச் சாடியவர்கள்
உடல் உயிர் ஆகிய இரண்டிலும் மாசு என்னும் குற்றம் நீங்கினால் 
மரணம் தவிர்க்கப்படும் என நம்பினர்.
வாழ்வதும் சாவதும் யார் கையிலும் இல்லை. அது நம்கையில்தான்
இருக்கிறது என்று அறிந்தனர்.
இதனைத்தான்மரணமில்லா பெரு வாழ்வுஎன்று வள்ளல் பெருந்தகை
வற்புறுத்தி வந்தார்.
'கலையுரைத்த கற்பனையை நிலையெனக் கொண்டாடும்
கண்மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடிப் போக

என அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை என்ற
சமரச சன்மார்க்கத்தைக் காட்டிய இராமலிங்க அடிகள் கூறுகிறார்


அடுத்த பதிவில் மேலும் காண்போம்..........

No comments:

Post a Comment