Showing posts with label ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள் வரலாறு பகுதி-1. Show all posts
Showing posts with label ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள் வரலாறு பகுதி-1. Show all posts

Saturday, May 18, 2013

சற்குரு ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள்


ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள்

வரலாறு பகுதி-1



                                          சற்குரு ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள்
                                          

18-ம் நூற்றாண்டின் இறுதியில்,,புதுவைக்கு அருகிலுள்ள கடலூரில்-வண்டிப்பாளயம்
என்ற ஊரில் ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள் பிறந்தார்.
பிறக்கும் பொழுதே இறையருளுடன் பிறந்ததால் அவர் வீட்டில்
லக்ஷ்மி கடாட்சம் இருந்தது.அவரின் வீட்டைபிள்ளையார் வீடு
என்றே சொல்வார்கள்,
சிறு வயது முதற்கொண்டே, திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளியுள்ள
ஸ்ரீ பாடலீஸ்வரரை-வழி பட்டு வந்தார்.இந்த ஆலயத்திற்கு. இவரது தாயார்
பூத்தொடுக்கும் பணியை செய்து வந்ததால்,ஆலயத்தில் மாலையை
கொண்டு சேர்க்கும் பணியை சிறுவன் சித்தானந்தன் செய்து வந்தார்.
அத்துடன் ஆலயப்பணியையும் செய்து வந்தார்,
அத்தலத்தில் உள்ள ஸ்ரீ பெரியநாயகி அம்மனின் பாற் ஈர்க்கப்பட்டு.
விடாது தொடர்ந்து எய்தி வழிபட்டார்,எவரொருவர் அனைத்தையும்
இறைவனுக்கு சமர்ப்பித்துவிட்டு-”அவனே கதி”- என்று அவன் பாதங்களில்
விழுந்து கிடக்கின்றாரோ , அவரிடமே இறைவன் ஒளி விட்டு
பிரகாசிப்பான்,இறைவன் நம்முள் பிரகாசிக்கத் தொடங்கினால்
தான் இறையுணர்வு கிட்டும்,

                    எய்தி வழிபடில் எய்தாதன இல்லை
                    எய்தி வழிபடில் இந்திரன் செல்வம்
                    எய்தி வழிபடில் எண்சித்தி உண்டாகும்
                    எய்தி வழிபடில் எய்திடும் முத்தியே
                                                      -திருமூலர்

எய்தி வழிபட்டார்,ஸ்ரீ பெரியநாயகி அம்மையின் திருவருள்
பெற்றார் கடும் தவ பயனினால் .அட்டமா சித்திகளையும் பெற்றார்.

 ஒரு முறை தாயார் கொடுத்தனுப்பிய பூமாலைகளை,ஆலயத்திற்கு
கொண்டு செல்லும்பொழுது,கடுமையான மழையின் காரணத்தினால்
சமயத்தில் கொண்டு போய் சேர்க்கமுடியவில்லை,ஆலயத்தின் கதவுகள் மூடியபிறகு
போய் சேர்ந்ததால், கதவிலேயே கட்டி விட்டு"-இறைவா,உனக்கு
தேவையானால் நீயே வந்து எடுத்துக் கொள்" என்று சொல்லி வந்து விட்டார்.
மறு நாள் கோவில் அர்ச்சகர்,சித்தானந்தனை ஏன் மாலை கொண்டு
வரவில்லை என்று கேட்க.தான் கதவிலே கட்டி விட்டு வந்ததையும்
இறைவனுக்குதேவைப்பட்டால் அவரே எடுத்து கொண்டிருப்பார்
என்றும் சொன்னார்.அர்ச்சகர் சிரித்து விட்டு போய் பார்க்க கோவில்
பூட்டப்பட்டிருக்க கதவில் கட்டி விட்டதாக சொன்ன மாலையை காணவில்லை.
உள்ளே சென்று பார்க்க இறைவனை அம்மாலை அலங்கரித்திருக்கக்
கண்டு ஆச்சரியப்பட்டுப் போனார்.உடனே சித்தானந்தனின் கால்களில்
விழுந்து வணங்கினார்.சித்தானந்தனின் சொற்கள் பலித்தன.
அவர் கைப்பட்டதுமே தீராத வியாதிகளும் தீர்ந்தன. அம்மையின்
அருளால் அவரின் புகழ் பல இடங்களிலும் பரவியது.
    ,ஒரு சமயம்.புதுவையில்-முத்தியால்பேட்டை என்னும் பகுதியில்
வாழ்ந்து வந்தமுத்து குமாரசாமி பிள்ளை என்பவரின் மனைவி
அன்னம்மாளுக்கு தீராத வியாதி வந்தது.சிறந்த மருத்துவர்களை
கொண்டு சிகிச்சையளித்தும் ஒன்றும் பயனளிக்கவில்லை.
மிகுந்த துயரத்தில் வாடிய அக்குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல
வந்த ஒரு பெரியவர்-கடலூரிலுள்ள ஸ்ரீ சித்தானந்த சுவாமிகளின்
அருளைப் பற்றி தெரிவித்து, உடனே சென்று பார்க்க சொன்னார்.
அடியார்க்கு தொண்டு செய்வதை தன் பாக்கியமாக கருதும்
முத்துக்குமார சாமி பிள்ளையவர்களும் உடனே கடலூர்
பாடலீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று சுவாமிகளை கண்டு
காலில் விழுந்து தன் கருத்தை தெரிவித்தார். சுவாமிகளும்
புதுவைக்கு வரச் சம்மதித்தார்.
சுவாமிகள் புதுவையை நெருங்கிக் கொண்டிருக்க அன்னம்மாளின்
நோயும் விலகிக் கொண்டிருந்தது.வீட்டிற்கு வந்ததும்
நோயும் பறந்தது.
தம்பதிகள் சுவாமிகளின் திருவருளை உணர்ந்து,தங்கள் இல்லத்திலேயே
அவரை தங்கும் படி வேண்டிக்கொண்டனர்.சுவாமிகளும் இசைந்தார்.
பிள்ளையவர்களின் வீட்டிலேயே தங்கி தம் ஆன்ம ஞானத்தை
மேற்கொண்டார்.சுவாமிகளின் அருளை கேள்விப்பட்டு அப்பகுதியில்
உள்ள மக்கள் திரண்டு வந்து ஆசி பெற்று சென்றனர்.

ஒரு நாள் பிள்ளையவர்களுடன்,சுவாமிகள் கருவடிகுப்பம் வழியாக
சென்று கொண்டிருந்த பொழுது-பிள்ளை தன் தோட்டத்தை காண்பித்தார்.
சுவாமிகள் உள்ளே சென்று பார்க்கலாம் என்று சொல்லி விட்டு
உள்ளே நடக்க ஆரம்பித்தார்.ஓரிடத்தில் நின்று உற்று பார்த்து விட்டு,
இது இங்கே தான் இருக்கப் போகிறது-இது இங்கே தான் இருக்கப்
போகிறதுஎன்று தம் உடலையும் அந்த இடத்தையும் மூன்று முறை
தம் விரலால் சுட்டி காண்பித்தார்.மற்றொரு இடத்தை காண்பித்து
பிள்ளையின் மனைவி சமாதியும் இங்கு தான் என்றார்.


அடுத்த பகுதியில் மேலும் அவரின் மகிமையை காண்போம்.....