Showing posts with label புதுவையில் சித்தர்கள் பகுதி-2. Show all posts
Showing posts with label புதுவையில் சித்தர்கள் பகுதி-2. Show all posts

Saturday, May 18, 2013

புதுவையில் சித்தர்கள் பகுதி-2


                                    சித்தர்கள் யார் ?

சித்தர்களைப் பற்றி மேலும்........



சித்தர்கள்- சிவயோகிகள்.
புறவாழ்வை துறந்து அகவாழ்வை பற்றியவர்கள்.

                     ” சித்தத்திலே சிவம் நாடுவார்-இங்கு
                   சேர்ந்து களித்துல காளுவார்-நல்ல
                   மத்த மதவெங் களிறுபோல்-நடை
                   வாய்ந்திறு மாந்து திரிகுவார்-இங்கு
                   நித்த நிகழ்வ தனைத்துமே-எந்தை
                   நீண்ட திருவருளால் வரும்-இன்பம்
                   சுத்த சுகந்தனி யாநந்தம்-எனச்
                   சூழ்ந்து கவலைகள் தள்ளியே
                                                       -பாரதி     
 
                    சிவமன்றி வேறே வேண்டாதே-யார்க்குந்
                    தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
                    தவநிலை விட்டுத் தாண்டாதே-நல்ல
                    சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே.
                                                      -கடுவெளிச் சித்தர்

அற்ற சிவ யோகிக்கு அருஞ்சின்னம் மூன்றுண்டு”.
என்று சித்தர்களைப் பற்ரி குறிப்பிடுவார்கள்.
அவை;-.பற்றலகை-பாலரியல்-உன்மத்தர்.
பற்றலகை என்றால் பேய் போன்று இரவு பகல் உறக்கமின்றி திரிந்து
இறைச்சிந்தனையிலேயே
உழன்று காலம்,இடம்,சூழல் பற்றி நினப்பற்று இருப்பர்.
பாலரியல் என்றால் பாலகரைப் போன்று-குழந்தையைப் போன்று
மானம்,ஈனம்,பார்க்கத் தெரியாமல் ஆடையின்றியோ அல்லது
அழுக்கடைந்த துணியுடனோ இருப்பர்.
உன்மத்தர் என்றால் உலகியலில் இருந்து பார்ப்பவர்களுக்கு இவர்
சித்த சுவாதீனம் உள்ளவரோ என்று எண்ணும்படியாக
செய்கை,தோற்றம்,பேச்சு இருக்கும்.

சித்தர்கள்-சித்துக்கள் செய்வது தங்களை மிகைப்படுத்தி காண்பித்துக் கொள்ள அல்ல.பிறரை
ஏமாற்றி பொருள் பறிக்கவும் அல்ல.தாங்கள் ஆண்டவனால் அருளப்பெற்றவர்கள் என்ற
நம்பிக்கையை மக்கள் மனதில் வளர்க்கவே என் நாம் அறிந்து கொள்ளல்  வேண்டும்.
எனவே, சித்தர்களெல்லாம் செயற்கரிய செயல்களாகத் தம் சித்துக்களைக் காட்டுவது
மனம் படியாத தாழ்ந்த மக்களை இறையுணர்வில் ஈடுபடுத்துவதற்கேயாம்.
உலக பொருள்களில் விருப்பம் கொண்டு தேடி அலைகின்றவர்களுக்கு இப்படி
சித்துக்கள் வாயிலாகத் திருவருள் காட்ட முடியும்.
சித்தின் நோக்கம் தெய்வத்தைக் காட்டுதலே.அவன் கருணையை உணரவைப்பதுவே.

மகாகவி பாரதியார் கூட தன்னை ஒரு சித்தர் என்று
சொல்லிக் கொண்டார்.

~எனக்கு முன்னே

சித்தர் பலர் இருந்தாரப்பா!
யானும் வந்தேன் ஒருசித்தன்
இந்த நாட்டில்|

என்கிறார். மேலும் தாம் இயற்றிய புதிய ஆத்தி சூடியில் சி;த்தர் பாணியில்-

அச்சம் தவிர்
ஏறுபோல் நட
தெய்வம் நீ என்றுணர்
நினைப்பது முடியும்

என அடித்துச் சொல்கிறார்.