Saturday, May 18, 2013

ஸ்ரீ சித்தானந்த சுவாமிகளைப் பற்றி மகாகவி பாரதி

ஸ்ரீ சித்தானந்த சுவாமிகளைப் பற்றி

மகாகவி பாரதி எழுதிய பாடல்



மகாகவி பாரதியார் புதுவையில்-குயில் தோப்பில் பாடல்
இயற்றிய பொழுது-அங்குள்ள சித்தர் மகான் ஸ்ரீ சித்தானந்த சுவாமி மேல்
ஒரு பாடல் இயற்றியுள்ளார்;-

மகாகவி பாரதியார், ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள் பற்றி சிறப்பாக
பாடியுள்ள பாடல் இதோ ;

சித்தானந்தசாமி திருக்கோயில் வாயிலில்
தீபவொளியுண்டாம்; பெண்ணே
முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட
மூண்ட திருச்சுடராம் ;பெண்ணே

உள்ளத்தழுக்கும் உடலிற் குறைகளும்
ஓட்டவருஞ் சுடராம்; பெண்ணே
கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்பட
காட்டவருஞ் சுடராம் ; பெண்ணே

தோன்று முயிர்கள் அனைத்தும் நன்றென்பது
தோற்ற முறுஞ் சுடராம்; பெண்ணே
மூன்று வகைப்படும் கால நன்றென்பதை
முன்னரிடுஞ் சுடராம்; பெண்ணே

பட்டினந்தன்னிலும் பார்க்க நன்றென்பதைப்
பார்க்க வொளிசுடராம்; பெண்ணே
கட்டு மனையிலுங் கோயில் நன்றென்பதைக்
காணவொளிர் சுடராம்; பெண்ணே  .

No comments:

Post a Comment