Saturday, May 18, 2013

சித்தர்களின் ஜீவ சமாதி


                                                                  ஜீவ சமாதி




சித்தர் சமாதி என்பது, சித்தர்கள் தங்கள் யோக நெறியினால் முத்தி நிலை
அடைந்த பின்பு, அவர்கள் தங்கள் உடலின் இயக்கத்தை நிறுத்தி வைத்து விட்டு,
பல ஆண்டுகளுக்குப் பின்பு, அந்த உடலை மீண்டும் இயங்கவைத்து உலகத்தில் நடமாடுவது என்பர்.
சித்தர் தங்கள் உடலியக்கத்தை நிறுத்திவிட்டு,
உடலைப் பூமிக்குள் புதைத்து வைக்கச் செய்வர். அவ்வாறு உடல் புதைக்கப்பட்ட
அல்லது மறைக்கப்பட்ட இடம் சமாதி எனப்படும். சமாதி நிலையில் இருப்பதும்
யோக நெறியின் உச்ச நிலையென உரைக்கப்படுகிறது.

அவ்வாறு, சித்தர்கள் சமாதி அடைந்த இடங்களாகத் தமிழகத்திலும் பிற
இடங்களிலும் சுமார் 39 இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வாரு இடமும்
ஒவ்வொரு சித்தர் அடங்கிய இடமாகக் கூறப்படுகிறது.
சித்தர்கள் அடங்கிய 39 இடங்களும் இன்றைய நிலையில் சைவ மதத்தின்
திருக்கோயில்களாகவும் வழிபாட்டிடங்களாகவும் இருக்கின்றன.
சித்தர்கள் அடக்கமாகிய சமாதிகள் சைவமதத்தின் திருக்கோயில்களாக
மாறியது பற்றிய உண்மை ஆராய்தற்கு உரியது. ஆனால் புறநானூற்றுப் பாடலில்
அதற்கான காரணம் விளங்கக் கூடியதாக
அமைந்திருக்கக் காணலாம்.
சித்தர்களின் ஜீவ சமாதி பீடமே கலியுகத்தில் வணங்கத்தக்க
இடமாகும்.ஏனெனில்,பிரபஞ்ச ஆற்றலை (இறைசக்தியை)
இப்பூமியில் நிரந்தரமாக நிலைப்படுத்தி வைத்துள்ள இடமே
சித்தர்களின் ஜீவசமாதி பீடங்களாகும்.
தற்போது உள்ள பழங்கோவில்கள் எல்லாம் சித்தர்களின்
மறைவிடங்களே.அவர்களின் ஜீவசமாதி மீது தான் புகழ் பெற்ற
கோவில்கள் அமைந்துள்ளன என்பது உண்மை.அவர்களின்
ஆற்றலே அங்கு பிரகாசிக்கிறது.

திருமலை திருப்பதிசித்தர் மகான் கொங்கனவர்
பழனி மலை முருகன் -- சித்தர் மகான் போகர்
சீர்காழி               -- சட்டை முனிநாதர்
திருச்செந்தூர்         --  இடைக்காடர்

சித்தர்கள் சமாதியடைவது (சித்தியாவது) என்பது முடிவு
பெற்ற ஒரு நிலை அல்ல.ஆண்டவனால் நியமிக்க பட்ட
ஒரு காரியத்தை- ஒரு காலத்திற்குள் நடத்தி காட்டி முடித்து
முக்தி அடைவதே சமாதியடைவது.ஆனால் அவர் ஆற்றல்,அருள்
என்றும் இப்பூமியில் நிலைத்திருக்கும்.

சித்தர்களின் ஜீவசமாதியை வணங்கினால் ஆண்டவனை வணங்கியதாகும்.
ஆண்டவனை வணங்கினால் அவர்களை வணங்கியதாகும்.
அங்கு சென்று ஊணுருக, உயிருருக,விழி கசிய தியானிப்போர்க்கு
அப்பீடத்தில் குடி கொண்டிருக்கும் சித்தர் பெருமக்கள்
தாம் பெற்றுள்ள பேராற்றலால் பக்தர்கள் குறையை போக்கி,
நல்வழி அருளுகிறார்கள்.
இது முற்றிலும் உண்மை.

அனைத்திற்கு அப்பாலும், அனைத்திலுமாய் நின்று இப்பிரபஞ்சங்களை
 தம் விருப்பம் போல் படைத்து-இயக்கும் பரம்பொருள், ஞானிகளின்
உள்ளே நடம் புரிகிறார்.

சிற்பங்கள் கட்டின கோவிலிலே அங்குத்
தற்பரன் வாழ மாட்டான்- குதம்பாய்
தற்பரன் வாழ மாட்டான்.
சித்தர்கள் ஞானிகள் ஜீவசமாதியில்
தற்பரன் நித்யம் தாண்டவம் புரிவானடி-குதம்பாய்
தாண்டவம் புரிவானடி.-குதம்பை சித்தர்.

ஞானிகளை சத்திய நிலையில் தெளிந்தறிதலினால் பரம்பொருளை
அறிய முடியும். பரம்பொருளை அறிந்துணர சித்தர்களின் ஜீவசமாதியை
பூஜிக்க வேண்டும்.

புண்ணிய பூமி, வேதபுரி என காலங்காலமாக,அகத்தியர்
முதல் அரவிந்தர் வரைஅனைவரையும் அரவணைத்து அவர்களின்
அருள் சாதகத்திற்கு,இறை சாதகமாக்கிய நம் புதுவை
மண்ணில் ஜீவ சமாதியாகியுள்ள சித்தர்கள் அநேகபேர்.
அவர்களில் பிறமதத்தினரும் உண்டு என்பதுவும் நம்
மண்ணின் பெருமை.
இவ்விதம் நமக்கு தெரிந்தும் இன்னும் தெரியாத பல
சித்தர்கள் உலவி,தம் அருள் ஆற்றலால் புண்ணியமாக்கிய
பூமிதான் நம் புதுவை மண்.இப்படி புதுவையிலும் அதை
சுற்றியுள்ள பிற இடங்களிலும் உள்ள சித்தர்களின் ஜீவ
பீடத்திற்குச் சென்று வழிபட்டு அவர்களின் பேரருளை பெறுவோமா..

No comments:

Post a Comment